ரஷ்ய - உக்ரைன் யுத்தத்திற்கு மத்தியில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட தூதுக்குழு

 






ரஷ்ய - உக்ரைன் யுத்தத்திற்கு மத்தியில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட தூதுக்குழுவொன்று இன்று 

1ரஷ்யா செல்லவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவொன்று ரஷ்யா பயணிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசேட தூதுக்குழுவுக்கும் ரஷ்ய அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு மொஸ்கோவில் நாளை (26) நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் காலை ரஷ்ய பாதுகாப்பு பிரதி அமைச்சருடனும் மாலை ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சருடனும் அவர்கள் கலந்துரையாடவுள்ளனர்.

இதன்போது பல சுற்று இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட மேலும் குறிப்பிட்டுள்ளார்.



Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial