தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர பிரித்தானியா முடிவு செய்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தமது எக்ஸ் தளத்தில் குறிப்பொன்றையிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய இராச்சியத்தின் ” தடை செய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு ஆணையம் ” தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
அந்நாட்டின் உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையிலான இந்த ஆணையம், பிரித்தானிய நாடாளுமன்றத்தால் நிறுவப்பட்ட ஒரு சுயாதீன நீதிமன்றமாகும்.
Post a Comment