தளபதி விஜய்யின் GOAT படம் இறுதி கட்ட பணிகளில் இருக்கிறது. ஏற்கனவே முதல் சிங்கிள் வெளியாகி இருந்த நிலையில், நேற்று வெளியான இரண்டாவது சிங்கிள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
வசீகரா படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் மற்றும் சினேகா கெமிஸ்ட்ரியை பார்ப்பதற்கு கொள்ளை அழகு என்று ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்த இரண்டாவது பாடல் மூலம் வசீகரா படம் தற்போது ட்ரெண்ட் ஆகிவிட்டது.
அது மட்டுமில்லாமல் விஜய் ஒரு சில வருடங்களுக்குப் பிறகு மெலடி பாடலை தன் சொந்த குரலில் பாடி இருக்கிறார். GOAT படம் பெரும்பாலும் AI டெக்னாலஜியுடன் தான் உருவாகி வருகிறது. விஜய் நடிக்கும் மூன்று கேரக்டர்களில் ஒரு கேரக்டர் AI டெக்னாலஜி உதவியுடன் தான் எடுக்கப்பட்டு இருக்கிறது.
அது மட்டும் இல்லாமல் நேற்று வெளியான பாடல், மறைந்த பின்னணி பாடகி பவதாரினியின் குரலை மீண்டும் AI டெக்னாலஜி உதவியுடன் கொண்டு வந்து உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் இந்த படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் கேரக்டரை AI உதவியுடன் கொண்டு வந்திருப்பதாக ஏற்கனவே பட குழு சொல்லி இருந்தது.
Post a Comment