பறவைக் காய்ச்சல் பதிவாகியுள்ள எந்தவொரு நாட்டிலிருந்தும் விலங்குகள் அல்லது விலங்கினப் பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு அனுமதியில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பல நாடுகளில் மீண்டும் தலைதூக்கியுள்ள பறவைக் காய்ச்சல் நோய்க்கிருமி நுண்ணுயிர் நுளம்பு உள்நுழைவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
எனவே இது குறித்து தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் அவர் மேலும் கோரியுள்ளார்.
Post a Comment