கடந்தாண்டு எத்தனையோ படங்கள் வெளி வந்தாலும் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் மற்றும் ரஜினி படங்களுக்கு தனி வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் லியோ மற்றும் ஜெயிலர் படம் போட்டி போட்டுக் கொண்டு வசூல் அளவில் யார் முந்துகிறார் என்று மோதி கொண்டார்கள்.
இதற்கிடையில் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி வெளிவந்த அனிமல் படம் லியோ மற்றும் ஜெயிலர் படங்களின் வசூலை ஓவர் டேக் பண்ணும் அளவிற்கு முந்திவிட்டது. அதாவது ஜெயிலர் மற்றும் லியோ வசூல் கிட்டத்தட்ட 600 முதல் 650 கோடி மட்டுமே பெற்றது. ஆனால் அனிமல் படம் 900 கோடிக்கு மேல் வசூலை குவித்து விட்டது.
சந்தீப் ரெட்டி வாங்க இயக்கத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தானா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அனிமல். அப்படிப்பட்ட இப்படத்தின் மொத்த பட்ஜெட் 100 கோடி தான். ஆனால் வசூலில் எதிர்பார்க்காத அளவில் லாபத்தை பெருக்கி விட்டது.
தற்போது அந்த பஞ்சாயத்து எல்லாம் சரி செய்து விட்டு இப்பொழுதுதான் ஓடிடி-யில் ரிலீஸ் பண்ண போகிறார்கள். வருகிற ஜனவரி 26 ஆம் தேதி netflix தளத்தில் வெளியாகிறது. இதுவரை வெளியனை இந்திய திரைப்படங்களில் இப்படி ஒரு இன்டர்வெல் பிளாக் வைத்ததே கிடையாது என்று பலரும் பாராட்டும் அளவிற்கு இப்படம் அமைந்திருக்கிறது.
Post a Comment