ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள தகவல்



 அதிகரித்து வரும் உணவுப் பாதுகாப்பின்மை, வறுமை மற்றும் உள், வெளித் தொழிலாளர் இடம்பெயர்வு காரணமாக இலங்கையில் அதிகமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் சேர்க்க முற்படுகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டில், குறிப்பாக கிராமப்புற மற்றும் தமிழர்கள் அதிகமாக வாழும் தோட்டப் பகுதிகளில் குழந்தைகள் பாதுகாப்பு பிரச்சினைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் யுனிசெப் தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டு முழுவதும் தொடரும் என எதிர்பார்க்கப்படும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இலங்கை தற்போது உள்ளது.

2023ஆம் ஆண்டில் 2.9 மில்லியன் குழந்தைகள் உட்பட 6.2 மில்லியன் மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் பணவீக்கம், உயர்ந்த வருமான பாதுகாப்பின்மை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பது அரிதாக இருப்பதால், குடும்பங்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கின்றன என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க

உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி   www.Akswisstamilfm.com 

 https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm. 

  https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

  புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial