இரண்டாவது முறை தந்தையான நடிகர் நரேன்..எத்தனை வயதில் தெரியுமா?

 


சித்திரம் பேசுதடி, அஞ்சாதே ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் நரேன்.

தமிழில் அறிமுகமாவதற்கு முன் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்திக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த கைதி, விக்ரம் ஆகிய படங்களிலும் நடித்து வந்தார்.

நடிகர் நரேன் கடந்த 2007ஆம் ஆண்டு மஞ்சு ஹரிதாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தன்மயா எனும் ஒரு மகளும் உள்ளார்.

மீண்டும் தந்தையான நரேன்

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாக நரேன் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். இதையடுத்து நேற்று நரேன் மகனுக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றுள்ளது.

இதில் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் நரேன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..



Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial