உண்ணும் முறை அறி
**** ****
உதட்டை மூடி உண்.
உள்ளங்கையில் படாது உண்.
பசித்த போது மட்டும் உண்.
உணவை மட்டும் எண்ணி உண்.
உணவை அரைத்து உண்.
உணவை ருசித்து உண்.
கடவுளை வணங்கி உண்.
காலையில் கட்டாயம் உண்.
வேலைக்கு ஏற்ற உணவு உண்.
உளத்தையும் தேற்ற உணவு உண்.
உடலுக்கு ஊட்டமளிக்கும் உணவு உண்.
சம்மணம் காலிட்டு உண்.
சமையலின் தரம் அறிந்து உண்.
உண்ணும் முறைதனை முன் அறி.
உடம்பின் திறனது பின் கூடும்.
வன்னிக்கவி லக்சன் ...
31.03.2023
*கறுப்பு நிறத்தழகி*
ReplyDeleteகறுப்பு நிறத்தழகி.
பல வர்ண நிறத்தழகி.
முகத்தில் உண்டு மாய அழகு.
உதட்டில் உண்டு ரோஜா மலரின் அழகு.
வெண் சாம்பல் மீசை வதனம் உண்டு.
கண் தீண்டும் பாசை கரு விழியும் உண்டு.
பிஞ்சு காலில் கூர் நகமும்,
சின்ன வாயில் ஆணி வேர் பல்லும்,
இரையின் உயிரை வெல்லும், இவளின் அணிகலன்கள்.
"மியாவ்" இவள் தாய்மொழி.
பெரிய புலியும் இவள் வழி.
இவள் கறுப்பு பூனை குட்டி.
அதனால்தான்,எங்கள் செல்ல குட்டி.
வன்னிக்கவி லக்சன்...
Post a Comment