புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவிலில் திருடிய நபர் கைது
புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவிலில் பல இலட்ச ரூபாய்களை திருடிய சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த திருட்டு சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
திருடிய நபரை சிலர் பாதுகாக்க முயற்சி செய்ததையும் மீறி, புங்குடுதீவு மண்ணின் மைந்தர்களான சுவாமிநாதன் ரகுநாதன் (கொழும்பு புறக்கோட்டை பிரபல வர்த்தகர்), கணேஷ் ஐங்கரன் (சுவிஸ்), மற்றும் கருணாகரன் குணாளன் (தீவக சிவில் சமூகம் உப தலைவர்) ஆகியோர் கடுமையாக ஈடுபட்டு இடைவிடாத முயற்சிகள் மேற்கொண்டதன் பலனாக குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, பொலிஸ் உயரதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்கோவிலில் நிகழ்ந்த திருட்டு சம்பவம், பக்தர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நீதிமுறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் இந்த வழக்கில் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவது பாராட்டத்தக்கது.
Post a Comment