புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவிலில் நடைபெற்ற திருட்டு சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்
2025 மே 13 ஆம் தேதி அதிகாலை, புங்குடுதீவில் அமைந்துள்ள இராஜ ராஜேஸ்வரி அம்மன் என்று வழங்கப்படும் கண்ணகை அம்மன் கோவிலில் திட்டமிட்ட வகையில் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதனால், புங்குடுதீவு மக்கள் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.
மேற்கண்ட திருட்டு சம்பவம் தொடர்பாக, கோவிலில் நீண்ட காலமாக பணியாற்றி வந்த ஒருவரை, சமூக செயற்பாட்டாளர்களின் இடையீடுகள் மற்றும் முயற்சிகளின் விளைவாக, 2025 மே 14 ஆம் தேதி மதியம், ஊர்காவற்துறை பொலிசார் கோவில் வளாகத்திலேயே கைது செய்தனர்.
கோவில் நிர்வாக அலுவலகத்தில் இருந்த சிசிரிவி பாதுகாப்பு கமெராக்கள் செயலிழந்த நிலையில், சுமார் பத்து லட்சம் ரூபாய் பெறுமதியிலான வெளிநாட்டு நாணயங்களும், இரண்டு இலட்சம் இலங்கை ரூபாய்களும் திருடப்பட்டுள்ளதாக பொலிசாரிடம் கோவில் நிர்வாகம் தகவல் வழங்கியுள்ளது. ஆனால், சந்தேகநபரிடமிருந்து இதுவரை ஐந்து லட்சத்திற்கும் குறைவான தொகையே மீட்கப்பட்டுள்ளது.
கோவில் நிர்வாகத்தினரிடம் சந்தேகநபர் பணத்துடன் சென்று, தன்னை மன்னிக்குமாறும் பணத்தை மீள கையளிக்கவும் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை ஏற்று, நிர்வாகம் பொலிஸ் முறைப்பாட்டிலிருந்து பின்வாங்க முற்பட்ட போதும், சமூக ஆர்வலர்களின் துரித செயற்பாட்டின் மூலமாக பொலிஸ் உயரதிகாரிகளிடம் தகவல் வழங்கப்பட்டு, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், திருடப்பட்ட பணம் முழுமையாக மீட்கப்படாமை, மற்றும் சந்தேகநபரை விடுவிக்க நிர்வாகம் முனைந்ததற்கான சூழ்நிலைகளும், ஏற்கனவே தங்க நகை திருடப்பட்ட சம்பவமும் நினைவில் கொண்டு, கோவில் நிர்வாகத்தின் மீதான நம்பிக்கை தடுமாறியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, வருடாந்த திருவிழா நேரத்தில் வாள்களுடன் குழுவொன்று கோவிலில் உலாவிய சம்பவமும், அதன் மீது எந்தவிதமான நடவடிக்கையும் நிர்வாகத்தால் எடுக்கப்படாததும்கூட அச்சத்தினை அதிகரித்துள்ளது. கோவில் மற்றும் சுற்றுப்புறங்களில் சிசிரிவி கமெராக்களை பொருத்த வேண்டும் என்ற பொதுமக்கள் வேண்டுகோளை நிர்வாகம் ஏற்காமை மீதான அதிருப்தியும் நிலவுகின்றது.
அதனால், புங்குடுதீவு மக்கள், கண்ணகை அம்மன் கோவிலில் மற்றும் அதன் சுற்றாடலில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்துமாறும், திருட்டு சம்பவம் தொடர்பாக முழுமையான, விடையளிக்கும் வகையிலான விசாரணையை மேற்கொள்ளுமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு வலியுறுத்தும் நூற்றுக்கணக்கான பொதுமக்களின் கையெழுத்துடன் கூடிய மகஜர் ஒன்று, மிக விரைவில் பொலிசாரிடம் கையளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த திருட்டு சம்பவத்தில் யார் யார் சம்மந்தம் என மிக விரைவில்
Post a Comment