கூவத்தூரில் ஊர்ந்து போன கரப்பான் பூச்சி பெயரை வைக்கலாமா? உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!

கூவத்தூரில் ஊர்ந்து போன கரப்பான் பூச்சி பெயரை வைக்கலாமா? உதயநிதி ஸ்டாலின் அட்டாக்! 


        சென்னை: மக்கள் நல திட்டங்களுக்கு கலைஞர் பெயரை சூட்டாமல் வேறு யார் பெயரை வைப்பது? கூவத்தூரில் ஊர்ந்து போன கரப்பான் பூச்சி பெயரை வைக்கலாமா? என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.  சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் பகுதியில், எளியோர் எழுச்சி நாள் எனும் பெயரில் 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார். மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் துணை முதல்வர் உதயநிதி. அதைத்தொடர்ந்து பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "திமுக அரசின் திட்டங்களை மக்கள் கொண்டாடுவதைப் பார்த்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவம் வருகிறது. வரத்தான் செய்யும். மக்கள் நமது திட்டங்களை கொண்டாடுவதைப் பார்த்து அவருக்கு எரிச்சல் வருகிறது. முதல்வரை மக்கள் வாழ்த்துவதால் எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல். அரசின் திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பது பற்றி எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்கிறார். தனது 96வது வயது வரை தமிழ்நாட்டுக்காக, தமிழ்நாட்டு மக்களுக்காக ஓயாது உழைத்த கலைஞர் பெயரை மக்கள் நல திட்டங்களுக்கு சூட்டாமல் வேறு யார் பெயரை வைப்பது? கூவத்தூரில் ஊர்ந்து போன கரப்பான் பூச்சி பெயரை வைக்கலாமா? இல்லை மறைந்த தலைவர்கள் பெயர்களையோ வைக்கலாமா?




 எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பெயரை வைத்தாலும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ள மாட்டார். அவருக்கு இப்போது அமித்ஷா, மோடி பெயரை வைக்க வேண்டும். எந்த நேரத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என 3 மாதங்களுக்கு முன்பு கூறி வந்த எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் அண்மையில் ஐ.டி ரெய்டு நடந்த மறுநாளே 'தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து பேசிக் கொள்ளலாம்' எனச் சொல்லிவிட்டார். இன்னும் ஒரு ரெய்டு நடந்தால் போதும்.. அதிமுகவையே பாஜகவுடன் இணைத்தாலும் இணைத்துவிடுவார். அந்தளவுக்குத்தான் இன்றைக்கு அதிமுக நிலைமை இருக்கிறது" என்று எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின், "நமது தலைவர் சொல்லி இருக்கிறார். 2026 நமக்கு முக்கியமான தேர்தல். குறைந்தது 200 சட்டமன்ற தொகுதிகளில் வென்றாக வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளார். இலக்கு 200 என்பதை மனதில் ஏந்தி, ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்துப் பேசி நமது திட்டங்களைச் சொல்ல வேண்டும். அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் மிக மிக முக்கியம்" என்றார்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial