இறக்குமதி செய்யப்பட்டுள்ள பொருட்களை விடுவிப்பதில் தாமதம்

 






பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  தொழிற்சங்கங்கள் சில நாடாளாவிய ரீதியில் இன்று  பணிபகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளன.

சுங்கதிணைக்கள அதிகாரிகள் சங்கத்தினர் இன்று சுகயீன விடுமுறைபோராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்

தங்களது கோரிக்கைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் பல்வேறு தடவைகள் தெரிவித்திருந்த போதிலும் இதுவரை தீர்வு முன்வைக்கப்படவில்லை என சுங்கஅதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் நாளையும் சுகயீன விடுமுறைபோராட்டத்தினை முன்னெடுக்க தீர்மானம் மேற்கொண்டதாக சுங்கஅதிகாரிகள் சங்கத்தின்  செயற்குழு உறுப்பினர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்

சுங்ககட்டளை சட்டத்தின் பலபிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என சுங்கஅதிகாரிகள் சங்கத்தினர்  தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைத்துள்ளனர்

இந்த விடயம் தொடர்பாக அதிகாரிகளிடம் பல்வேறு தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும் உரிய தீர்வு முன்வைக்கப்படாத காரணத்தினால்  சுங்கஅதிகாரிகள் சங்கத்தினர் முன்னதாக   கடந்த 2 நாட்கள் சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்

இதன் அடுத்தகட்டமாகவே இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்

எவ்வாறாயினும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு துறைமுகம் மற்றும் காலி துறைமுகம் உள்ளிட்ட பொதுமக்களுக்கு நேரடியாக சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் தொழிற்சங்க நடவடிக்கை அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் அறிவித்துள்ளனர்

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial