ஒரு நடிகர் என்றால் ஹீரோவாக தான் நடிக்கணும் என்று வரைமுறை இல்லாமல் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் ரசிக்கும்படி நடித்து கைதட்டல்களை வாங்கி விடுவோம் என்று சில நடிகர்கள் தான் நடித்துக் கொண்டு வருகிறார்கள்.
இதற்கு உதாரணமாக விஜய் சேதுபதியையும் சொல்லலாம். ஆரம்பத்தில் கிடைத்த சிறு சிறு கதாபாத்திரங்களை சரிவர செய்து கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோ அவதாரம் எடுத்தார்.
இதனை தொடர்ந்து வில்லனாகவும் மிரட்டல்லான நடிப்பை கொடுத்து வில்லன் ரேஞ்சுக்கும் வளர்ந்து வந்தார். ஆனால் இதனால் ஹீரோ இமேஜ் பாதிக்கப்படுகிறது என்று தெரிந்ததும் கொஞ்ச நாளைக்கு ஹீரோவாக பயணத்தை தொடலாம் என்று முடிவு எடுத்து விட்டார். அந்த வகையில் இரு தினங்களுக்கு முன் வெளிவந்த மகராஜா படம் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெற்றி பெற்று வருகிறது.
தற்போது அனைத்து திரையரங்குகளிலும் ஓடிக் கொண்டு வருவதை ஒட்டி வசூல் அளவிலும் லாபத்தை பார்த்து வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் கதை ஆனது பெண்களை சீண்டினால் எந்த மாதிரியான தண்டனை கிடைக்கும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக பெண்பாவம் பொல்லாததுன்னு நிரூபித்துக் காட்டியிருக்கிறார். ஒரு பாசமான அப்பாவாக தத்ரூபமான நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார்.
Post a Comment