இந்தியாவின் - மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டார்ஜிலிங் தொடரந்து நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடுகதி தொடருந்துடன் எதிரே வந்த தபால் தொடருந்து ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்தில் 8 பேர் பலியாகியதோடு, 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தானது, இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது நிறுத்திவைக்கப்பட்டிருந்த தொடருந்தின் பின் பகுதியில் இருந்த 3 பெட்டிகள் தடம்புரண்டு சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Post a Comment