வேட்டையன் படத்தின் அடுத்த கட்ட பணியைத் தொடங்கிய ரஜினி!

 






ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. 

முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.


படத்தில் ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இப்போது அவர் இமயமலைக்கு ஆன்மிக சுற்றுலாவுக்கு சென்றுள்ளார். 

அங்கு அவர் துறவியோடு பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் பல விஷயங்களை  பேசும் நிலையில் வேட்டையன் படம் பற்றியும் பேசியுள்ளார். 

அதில் வேட்டையன் திரைப்படம் தசரா பண்டிகையை முன்னிட்டு ரிலிஸாகும் எனக் கூறியுள்ளார். இதன் மூலம் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், வேட்டையன் படத்துக்கு டப்பிங்க் பேசி வருகிறார். 

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial