கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படமான மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம் கேரளா தாண்டியும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லி இருந்தனர்.
இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமானக் காரணமாக படத்தில் இடம்பெற்றிருந்த குணா படத்தில் இடம்பெற்ற“கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே” பாடல் அமைந்தது. படத்தின் உச்சகட்ட காட்சியில் அந்த பாடலை மிகச்சரியாக பொறுத்தி ரசிகர்களை மயிர்கூச்செறிய செய்திருந்தார் இயக்குனர்.
அதனால் அந்த பாடல் மற்றும் குணா திரைப்படம் தற்போதைய ரசிகர்கள் மத்தியில் மீண்டும் கவனம் பெற்றது. இந்நிலையில் ஜூன் 21 ஆம் தேதி இந்த படத்தை ரி ரிலீஸ் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது கமல் மற்றும் மஞ்சும்மள் பாய்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment