யாழில் மீட்கப்பட்ட பெருமளவு கஞ்சா

 






யாழ்ப்பாணம் - வடமராட்சி, கிழக்கு தாளையடி பகுதியில் 135 கிலோ கேரள கஞ்சா  மீட்கப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை அதிகாலை 4:45 மணியளவிலேயே கேரள கஞ்சா   மீட்கப்பட்டுள்ளது.

கஞ்சா கடத்தல் இடம்பெறுவதாக கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த  தகவலிற்கு  அமைவாக  வெற்றிலைக்கேணி கடற்படை மற்றும் சிறப்பு அதிரடி படையினர்  இணைந்து தாளையடி பகுதியில் தேடுதல் நடாத்தியுள்ளனர். 

அவ்வேளை கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

அங்கு காணப்பட்ட  135  கிலோ கிராம் எடையுள்ள 03 கேரள கஞ்சா பொதிகளை கைப்பற்றிய வெற்றிலைக்கேணி  கடற்படை, மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் குறித்த கஞ்சாவை பொதிகளை  மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial