இறந்துவிட்டதாக கூறப்படும் இலங்கை அகதி ஒருவர், உயிருடன் இருப்பதாகவும் அவரை திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் இருந்து மதுரை முகாமுக்கு மாற்றுமாறும் சென்னை மேல்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது
குறித்த அகதியின் மாமி முறையான உறவினர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக காந்தன் என்ற கே. கிருஸ்ணக்குமார், இறந்துவிட்டதாகவும் எனவே அவர் இந்தியாவில் நிரந்தரமாக தங்கியிருக்க அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் புலம்பெயர்ந்த தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலன் ஆணையகம் அறிவித்திருந்தது.
எனினும் கிருஸ்ணக்குமார் இன்னும் உயிருடன் இருப்பதாகவும் அவரை திருச்சி முகாமில் இருந்து மதுரை முகாமுக்கு மாற்றவேண்டும் என்றும் அவரின் மாமியார் சென்னை மேல்நீதிமன்றில் மேன்முறையீட்டை செய்துள்ளார்.
மனுதாரரான 63 வயதான டி.நாகேஸ்வரி, தானும் தனது குடும்பத்தினரும் 1990-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்ததாகவும் அன்றிலிருந்து மதுரை முகாமில் வசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமது மருமகன் கிருஸ்ணகுமார், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 2015 இல் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் ராமநாதபுரத்தில் உள்ள நீதிமன்றம் அவருக்கு 2018 இல் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது.பின்னர் தண்டனை ஏழு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
இதன் பின்னர் சென்னை மேல் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு, 2022 ஜூலை முதலாம் திகதியன்று அவரை விடுவித்தது. எனினும் அன்றிலிருந்து திருச்சியின் முதல்வர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டார்.
Post a Comment