சுற்றுலா துறைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அதன்படி, மேற்படி தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள குறித்த விதிமுறைகளின் அங்கீகாரத்திற்காக நாணயம், பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Post a Comment