இரத்தினபுரி கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படும்

 



இரத்தினபுரி கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை  மூடப்படும் என சப்ரகமுவ மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார்.

சப்ரகமுவ மாகாண கல்விச் செயலாளர் அறிவிப்பொன்றை வெளியிட்டு இந்தத் தீர்மானத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன் நிவித்திகல கல்வி வலயத்தின் அலபத, அயகம, கலவான ஆகிய கல்விப் பிரிவுகளுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் நாளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாளைய தினம் நிலவும் சீரற்ற காலநிலையின் அடிப்படையில் பாடசாலைகளை நடத்துவது குறித்து பிராந்திய பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு தீர்மானிக்கப்படும் என சப்ரகமுவ மாகாண கல்விச் செயலாளர் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial