யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி வீதிப் பகுதியில் குடும்பப்பெண்ணை அழைத்து வந்த நபர் ஒருவர் குறித்த பெண்ணை தீ மூட்டி கொழுத்தியதால் அப்பகுதியில் பதட்ட நிலை ஏற்பட்டது
சாவகச்சேரியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான இரத்தினவேல் பவானி எனும் 45 வயதான குடும்பப் பெண்னே மேற்படி நபரால் எரியூட்டப்பட்டுள்ளார்.
சம்பவத்தை பார்த்த ஊர் மக்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்து அப்பகுதிக்கு வந்த பொலிசார் தீயை அணைத்து குறித்த பெண்ணை அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
Post a Comment