அதில் சமீபத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையான போட்டியில் கமல் மற்றும் இயக்குனர் சங்கர் அவர்கள் நேரலையில் பங்கு கொண்டு இந்தியன் 2 படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டனர்.
கமல் மற்றும் சங்கர் கூட்டணியில் கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு முன்பு உருவான படம் தான் இந்தியன். கதை மற்றும் காட்சி அமைப்பிற்காக ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.
இந்தியன் படத்தின் அடுத்த பாகம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் பல ஆண்டுகள் கழித்து, இதன் அடுத்த பாகத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் உலகநாயகன் கமலஹாசன்.
சங்கரின் இயக்கத்தில், லைக்காவின் தயாரிப்பில், கமலஹாசன் உடன் ரகுல் ப்ரீத்தி சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சித்தார்த், எஸ் ஜே சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து பல வருடங்களாக தயாரானது இந்தியன் 2.
இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இந்தியன் 2 படத்தின் செய்திகள் பற்றியும், இதில் நடிக்க ஒப்புக்கொண்ட காரணத்தைப் பற்றியும் கிரிக்கெட் நேரலையில் மனம் திறந்தார் கமல்.
முதலில் சங்கர், இந்தியன் 2 மற்றும் 3 படத்தின் மொத்த கதையையும் இணைத்தே கூறினார். இதன்பின்பே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார்.
ஜூலை மாதம் இந்தியன் 2 வெளியாகும் எனவும், இதனைத் தொடர்ந்து ஆறு மாதங்கள் கழித்து இந்தியன் 3 வெளியாகும் எனவும் சுடச்சுட அப்டேட் கொடுத்தார் கமலஹாசன்.
மேலும் கிரிக்கெட்டை பற்றி பேசும்போது, “சென்னை என்று பெயர் வைத்த தலைமுறை நாங்கள்! சென்னை எங்களுடையது! என்ற பெருமை எங்களுக்கு உண்டு”. எங்களுடைய முழு ஆதரவும் சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்கு உண்டு என்று கூறினார்.
உயர்தர தொழில்நுட்பத்துடன் “இந்தியன் இஸ் பேக்” என்ற டேக் லைனுடன் இந்தியன் 2 மற்றும் 3 அடுத்தடுத்த பாகங்களாக வெளிவந்து ரசிகர்களை கொண்டாட வைக்க உள்ளார் உலகநாயகன்.
Post a Comment