வெற்றிமாறன், பா. ரஞ்சித் ஆகிய திரைப்பட இயக்குநர்களை, மற்றொரு தரப்பு இயக்குநர்கள் மிக மோசமாக விமர்சித்த நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவிலேயே தலைசிறந்த இயக்குநர் வெற்றிமாறன் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
நடிகர் ரஞ்சித் இயக்கி நடிக்கும் கவுண்டம்பாளையம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது அந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குநர்கள் பேரரசு, பிரவீன் காந்தி, ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட இயக்குநர்கள், இப்போதைய திரைப்படங்களில் சாதி அதிகமாக பேசப்படுவதாக குற்றம்சாட்டினர்.
குறிப்பாக, வெற்றிமாறன், பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோரின் வளர்ச்சி தான், தமிழ் சினிமாவின் தளர்ச்சி என்று இயக்குநர் பிரவீன் காந்தி தெரிவித்திருந்தார்.
Post a Comment