சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் உதவி சுங்க அத்தியட்சகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை பகுதியில் வைத்து கொழும்பு மத்திய ஊழல் குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 7,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் இருந்து பெறப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் பெறுமதி சுமார் 590,000 ரூபா என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Post a Comment