ரிமால் புயல் காரணமாக கடற்பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீன்களின் விலை உயர்வடைந்துள்ளதாக பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அந்தவகையில், அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை, கல்முனை, மருதமுனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, நிந்தவூர் ,அட்டாளைச்சேனை, ஒலுவில், அக்கரைப்பற்று, தம்பிலுவில், பொத்துவில் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கிலோ விளை மீன் 1,600 ரூபாயாகவும், பாரை மீன் ஒரு கிலோ 2,400 ரூபாயாகவும், இறால் ஒரு கிலோ 1,800 ரூபாயாகவும், கணவாய் ஒரு கிலோ 1,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சூடை மீன் ஒரு கிலோ 1,000 ரூபாயாகவும், சுறா மீன் ஒரு கிலோ 2,500 ரூபாயாகவும், வளையா மீன் 1500 ரூபாயாகவும், நண்டு ஒரு கிலோ 1,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
Post a Comment