இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள பல பாடசாலைகளுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த வாரம் டெல்லியில் உள்ள சுமார் 200 பாடசாலைகளுக்கு இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், டெல்லி பாடசாலைகளுக்கு வந்த மிரட்டல் வெறும் வதந்தி எனவும், குறித்த மின்னஞ்சல் ரஷ்யாவிலிருந்து அனுப்பப்பட்டது என்பதும் விசாரணைகளில் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரிலுள்ள பாடசாலைகளுக்கும் இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமை அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை அகமதாபாத் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment