விஜய் இப்போது கோட் படத்தில் பிஸியாக இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இதில் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் இதன் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி இருந்தது. விசில் போடு என தொடங்கும் அந்த பாடலில் விஜய் அண்ட் கோ-வின் ஆட்டம் வேற லெவலில் இருந்தது.
ஆனாலும் யுவன் சங்கர் ராஜா ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை என்ற கருத்தும் எழுந்தது. இந்நிலையில் வெங்கட் பிரபுவுக்கு விஜய் ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறாராம்.
இதுதான் குறை என்று சொல்ல முடியாத அளவுக்கு படம் சிறப்பாக வந்திருக்கிறது. அதை பார்த்து சந்தோஷப்பட்ட விஜய் எதற்கும் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள் என கூறி இருக்கிறார்.
மேலும் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டாம் சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும் என்று கூறி இருக்கிறார். அதன்படி தற்போது வெங்கட் பிரபுவும் அலப்பறை எல்லாம் ஓரம் கட்டி இருக்கிறார்.
வரும் செப்டம்பர் மாதம் படம் வெளிவர இருக்கும் நிலையில் எந்த ஆர்ப்பாட்டமும் வேண்டாம் என பட குழு அமைதி காத்து வருகிறது. ஆனால் அடுத்தடுத்த அப்டேட்டுகள் நிச்சயம் தளபதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
Post a Comment