சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரிப்பது உள்ளிட்ட பல அபிவிருத்தி திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
வடக்கில் முன்னெடுக்கக்கூடிய சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டங்கள் குறித்து வடக்கு மாகாண ஆளுநருடன் இந்திய உயர் அதிகாரிகள் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத் தளங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்வஞ்சல் பாண்டே உள்ளிட்ட குழுவினர்
வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர்.
யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளியும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டார்.
குறிப்பாக பலாலி விமான நிலைய அபிவிருத்தி, சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரித்தல், காங்கேசன்துறைக்கும் தூத்துக்குடிக்குமான பயணிகள் கப்பல் சேவை போன்ற திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் இயற்கை சக்தி வளங்களை பயன்படுத்தி மின்னுற்பத்தியை மேற்கொள்ளுதல் மற்றும் வடக்கில் முன்னெடுக்கக்கூடிய ஏனைய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா
தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Post a Comment