இலங்கைத் தமிழ் மருத்துவர் ஒருவர் இசை மூலம் சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்து அதில் வெற்றி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது கனடாவின் ஸ்காப்ரோவில் சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒருவர் இசை மூலம் மகிழ்வித்து வருகின்றார்.
கனடாவில் இவ்வாறான ஒரு சாதனை மேற்கொண்ட முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது.
இலங்கை தமிழ் மருத்துவர் ஒருவரே இவ்வாறு சிறுவர்களுடன் நெருங்கிப் பழகவும் அவர்களுக்கான நிதி திரட்டவும் இசையை பயன்படுத்தி வருகின்றார்.
ரெஜின் ராஜேந்திரம் என்ற சிறுவர் நல நிபுணத்துவ மருத்துவர் கடந்த சில ஆண்டுகளாகவே இசை ஆல்பங்களை வெளியிட்டு வருகின்றார்.
இசை ஆல்பங்களின் ஊடாக கிடைக்கும் வருமானத்தை ஆட்டி சிம் உள்ளிட்ட நோய்களினால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கான சிகிச்சைகளுக்காக பயன்படுத்தி வருகின்றது.
குறிப்பாக ரெஜின், மருத்துவர் மட்டுமன்றி ஓர் சிறந்த ராப் இசைக்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
விசேட தேவையுடைய சிறார்களுக்காக பாடல்களை வெளியிட்டு நிதி திரட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் நோய்வாய்ப்பட்டுள்ள குழந்தைகள், தாம் ராப் இசைக்கலைஞர் என்பதனால் இலகுவில் தன்னுடன் நட்புறவாகி விடுவதாகவும் இதனால் சிகிச்சை அளிப்பதற்கு இலகுவாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment