தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் எப்படி உச்சத்தில் இருக்கும்போதே அரசியலில் நுழைந்து ஆதிக்கம் செலுத்தினாரோ அதே பாணியில் தளபதி விஜய்யும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும்போதே அரசியலில் கால் பதித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சியின் அறிவிப்பை தொடர்ந்து, ஒப்பந்தம் ஆகியுள்ள ஒரு சில படங்களில் நடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக ஈடுபட போகிறார்.
தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தின் கோட் திரைப்படத்தில் நடித்து வரும் தளபதி படப்பிடிப்புக்காக ரஷ்யா செல்ல உள்ளார். அதே சமயம் விஜய் 69 படத்திற்கான கதை விவாதமும், இயக்குனர் தேடலும் பகுதிவாரியாக நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகரான விஜய் சினிமாவை விட்டு விலகுவது ஆச்சரியத்தை கிளப்பி இருந்தாலும் அரசியல் வரவு என்பது உறுதியானது.
தமிழக வெற்றி கழகம் என தனது கட்சியை அறிவித்து, பல அதிரடியான கட்டளைகளை பிறப்பித்து வருகிறார்.
தனது கட்சிக்கான செயலி ஒன்றையும் அறிமுகப்படுத்தி தொண்டர்களுக்கு 2 கோடி கட்சி உறுப்பினர்களை சேர்ப்பது என்ற இலக்கையும் செட் செய்து வைத்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தில் இதுவரை கிட்டத்தட்ட 50 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக தகவல்.
அனுபவ அரசியல் கட்சி போல் பல அணிகளை உருவாக்கி 2026 இல் முதல்வர் ஆகிய திருவேன் என பல அண்டர்கிரவுண்ட் வேலைகளை செய்து வருகிறார் தளபதி.
Post a Comment