இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
சற்றுமுன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அவர் உள்ளிட்ட குழுவினர் வந்தடைந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்துள்ள தாய்லாந்து பிரதமர், 76வது சுதந்திர விழாவில் கௌரவ அதிதியாகவும் பங்கேற்கவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, தாய்லாந்து பிரதமர் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதுடன், வரலாற்று சிறப்புமிக்க இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதையும் பார்வையிட உள்ளார்.
சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் தாய்லாந்தின் துணைப் பிரதமரும், வர்த்தக அமைச்சருமான பும்தம் வெச்சயாச்சாய் மற்றும் இலங்கையின் வணிக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ ஆகியோர் கைச்சாத்திடுவர்.
இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் வாயிலாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை அதிகரிப்பதற்கும், ஆசியான் பொருளாதாரங்களுடன் ஆழமான ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், விமான சேவைகள் ஒப்பந்தத்தை புதுப்பித்து, இலங்கையின் இரத்தினம் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தாய்லாந்தின் இரத்தினம் மற்றும் ஆபரண நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும் இரு தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment