அரசியலுக்கு வரும் அஜித்?

 



நடிகர் அஜித் குமார், துணிவு படத்துக்குப் பின் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜனில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இது அஜித்குமார் சாருக்கு. நிவின் பாலியும் சுரேஷ் சந்திராவும் நீங்கள் அரசியலுக்கு வர உள்ளாகக் கூறியதைக் கேட்டேன். இது எப்போது என்றால், பிரேமம் படத்தில் நிவின் பாலியின் நடிப்பைக் கண்டு வியந்த உங்கள் மகள் அனோஷ்காவுக்காக நிவின் பாலியை வீட்டிற்கு அழைத்து பேசினீர்களே அப்போது. ஆனால், இதுவரை உங்களைப் பொதுவெளியிலோ அரசியல் கட்சிகளிலோ பார்க்கவில்லை. ஒன்று அவர்கள் என்னிடம் பொய் சொல்லியிருக்கின்றனர் இல்லையென்றால் நீங்கள் அதை மறந்துவிட்டீர்கள் அல்லது வேறு யாரோ உங்களுக்கு எதிராக இருக்கிறார்கள். இது மூன்றும் இல்லையென்றால் எனக்கு கடிதம் வாயிலாக நீங்கள் பொதுவெளியில் விளக்கம் அளிக்க வேண்டும். ஏனென்றால், நான் உங்களை நம்புகிறேன். பொது மக்களுக்கும் நம்புகிறார்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

இப்பதிவு வேகமாக பரவி வருவதுடன் அஜித் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அல்போன்ஸ் புத்திரனின் கணக்கை யாராவது முடக்கிவிட்டார்களா? இல்லை அவரே பதிவிட்டிருக்கிறாரா என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial