MEFTAL வலி நிவாரணியால் எதிர்விளைவுகள்
டெல்லி : மாதவிடாய் வலி, முடக்கு வாதம் உள்ளிட்ட வலிகளுக்கு பயன்படுத்தப்படும் ‘MEFTAL’ வலி நிவாரணி மாத்திரைகளால் மோசமான எதிர்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.*
ரத்தத்தில் அளவுக்கு அதிகமான வெள்ளை அணுக்கள் (Eosinophils) உருவாக வாய்ப்பு உள்ளது. தோல் எரிச்சல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மாத்திரை உட்கொண்ட 2 முதல் 8 வாரங்களுக்கு பின் தோன்ற வாய்ப்புள்ளது. மருத்துவர்கள் அறிவுறுத்தல் இன்றி வலி எழும்போதெல்லாம் இதனை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Post a Comment