இந்தியாவில் மீண்டும் புதிய கொரோனா வைரஸ் ஒன்று பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புதிய கொரோனா வைரஸ் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்து பரவி வருவதாக கூறப்படுகிறது.
சிங்கப்பூரிலும் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மருத்துவ பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், கேரள மாநிலத்தில் 230 பேருக்கு கொரோனா தொற்று காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
அத்தோடு, பாதிக்கப்பட்ட 1104 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment