நடிகனுக்கு ரசிகர்கள் இருப்பது இயல்பு, ஆனால் நடிகனுக்கு பல நடிகர்களை ரசிகர்களாக இருப்பது ஒரு சிலருக்கு மட்டுமே அமையும். அதில் முதலில் ரஜினி இருந்து வருகிறார். ரஜினியை பார்த்து நடிக்க வந்தார்கள், நடிக்க வந்த பிறகு ரஜினியை போல செய்து வெற்றியும் பெற்று வருகின்றனர். இப்பொழுது கொடி கட்டி பறக்கும் விஜய் கூட ரஜினியை ரோல் மாடலாக வைத்து தான் தற்பொழுது வளர்ந்து வந்துள்ளார்.
அதேபோல விஜய், அஜித் இவர்களுக்கும் இதே போல் பல நடிகர்கள் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் தன்னை தல ரசிகன் என நேரடியாகவே காட்டிக் கொண்டு வருவார் சிம்பு. அதை பல படங்களில் வெளிப்படையாக பேசினார் பல பேட்டிகளில் வெளிப்படையாக சொல்லியும் விடுவார்.
இதற்கு முக்கிய காரணம் தொட்டி ஜெயா படத்தில் இருந்து ஆரம்பமானது அந்த படத்தில் நடிக்க வேண்டியது அஜித் அது தம்பி சிம்புவுக்கு தான் சரியாக இருக்கும் என அவருக்கு அந்த வாய்ப்பை கொடுத்தார். இந்த படத்தில் இருந்து சினிமாவில் சிம்பு முக்கியமான ஆக்சன் ஹீரோவாக களம் இறக்கப்பட்டார். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகவே அவர் அஜித்தின் ரசிகனாகவே மாறிவிட்டார்.
Post a Comment