நடிகைகளுக்கு பஞ்சமே இல்லை என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு படத்திற்கும் புதுப்புது நடிகைகள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இதனால் ஒரு படத்திற்கு இரண்டு மூன்று நடிகைகள் கமிட் ஆகி நடிக்கும் நிலைமை ஆகிவிட்டது. அந்த வகையில் காமெடி நடிகர்களுக்கும் ஜோடி போட்டு நடிப்பதற்கு நடிகைகள் கிளம்பி விட்டார்கள்.
அப்படி காமெடி நடிகராக இருந்த சதீஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கன்ஜூரிங் கண்ணப்பன் நகைச்சுவை கலந்த திரில்லர் படமாக ரசிகர்களை கவர்ந்தது. இதில் ரெஜினா கசாண்ட்ரா ஹீரோயினாக நடித்திருந்தார். இவருடன் சேர்ந்து எல்லி அவ்ராம் பேய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளிவந்த நானே வருவன் படத்தில் சைக்கோ தனுஷ் கேரக்டருக்கு மனைவியாக மாதிரி கேரக்டரில் நடித்திருக்கிறார்.
அப்படிப்பட்ட இவர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு 70 நாட்களில் வெளியேறினார். இதன் மூலம் மக்களுக்கு பிரபலமான இவர் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொண்டு வருகிறார். ஆரம்பத்தில் மாடலிங்கில் ஆர்வம் காட்டி வந்தவர் தற்போது பேரும் புகழுக்காக சினிமாவில் நிலைத்து நிற்க ஆசைப்படுகிறார்.
Post a Comment