ஈராக்கில் உள்ள அமெரிக்க துருப்புக்கள் மீது ட்ரோன்கள் உள்ளிட்ட வெடிபொருட்களைப் பயன்படுத்தி புதிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இராணுவ மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
வியாழன் அன்று மூன்று தாக்குதல்கள் நடந்ததாகவும் ரோந்துப் பணியில் இருந்த வாகனம் சேதமடைந்துள்ளது என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதில் மூன்று அமெரிக்க துருப்புக்கள் சிறிய காயங்களுக்கு ஆளானார்கள் என்றும் அவர்கள் கடமைக்குத் திரும்பியுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க மற்றும் நேச நாட்டு துருப்புக்கள் மீது 40 க்கும் மேற்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:AKSTAMILMEDIA
world news
Post a Comment