2 முறை ரிஜெக்ட் பண்ணியும் விஜய்க்காக காத்திருக்கும் இயக்குனர்..

விஜய் நிற்காமல் அடுத்தடுத்து படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டே வருகிறார். அந்த வகையில் லியோ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவுடன் தளபதி 68 படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படம் விஜய்க்கு ஏற்ற மாதிரி ஹியூமர் சென்சை அதிகமாக வைத்து அனைத்து ரசிகர்களும் விரும்பும் படியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் வெங்கட் பிரபு படம் காமெடி நக்கல் கலந்த படமாக தான் இருக்கும். அடுத்ததாக இவருடைய 69 ஆவது படத்தை யாருடன் கூட்டணி வைப்பார் என்று பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது மாஸ் இயக்குனர் ஒருவருடைய பெயர் அடிப்படைகிறது. அதாவது இவர் ஏற்கனவே விஜய் இடம் இரண்டு தடவை படம் பண்ணுவதற்காக ஸ்டோரியை சொல்லி இருக்கிறார். இந்த கதை எழுதும்போதே விஜய்யை மனதில் வைத்து தான் எழுதி இருக்கிறார். அந்த வகையில் கண்டிப்பாக விஜய்க்கு இந்த கதை பிடித்து போக வாய்ப்பு இருக்கிறது. அந்த இயக்குனர் வேறு யாரும் இல்லை பீட்சா படத்தை எடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவர் எடுத்த பீட்சா படம் விஜய்க்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. இதை தெரிந்துகொண்ட கார்த்திக் சுப்புராஜ் இறைவி மற்றும் பேட்ட படம் எடுக்கும் பொழுது விஜய்யிடம் கதை சொல்லி இருக்கிறார். ஆனால் இரண்டு முறையும் விஜய் அந்த கதையை நிராகரித்திருக்கிறார். அதனால் தற்போது விஜய் ரிஜெக்ட் பண்ண முடியாத அளவிற்கு ஒரு ஸ்ட்ராங்கான கதையை கையில் வைத்திருக்கிறார். அந்த வகையில் விஜய் அவருடைய 69 ஆவது படத்தை கார்த்திக் சுப்புராஜ் உடன் கூட்டணி வைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதற்கிடையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளிவந்து மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றால் கண்டிப்பாக விஜய் கூட்டணி வைப்பது உறுதியாகிவிடும்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial