யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி இப்போது எகிறி கொண்டிருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் சில தினங்களுக்கு முன்பு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் தான். தன் தரப்பு நியாயத்தை கூட எடுத்து வைக்க முடியாமல் அவர் வீட்டை விட்டு சென்றது இப்போது கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அதைத்தொடர்ந்து தற்போது அவருக்கு ஆதரவாக சோசியல் மீடியாவில் ரசிகர்கள் ஒன்று திரண்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் புதுப்புது ஹேஷ் டேக்குகளை உருவாக்கி ட்ரெண்ட் செய்து கமல் மீது தங்களுக்கு இருக்கும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன்படி தற்போது பிரதீப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
அவர் மீது வெறுப்பு கொண்டிருந்த ரசிகர்கள் கூட இப்போது ஆதரவை தெரிவித்து வரும் அளவுக்கு சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் கமலுக்கு எதிரான கருத்துக்களும் கிளம்பியுள்ளது. இதனால் ஆடிப்போன ஆண்டவர் இந்த விவகாரத்தில் நிச்சயம் ஒரு சுமூகமான முடிவை எடுக்க வேண்டும் என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளாராம்.
Post a Comment