இஸ்ரேல் மற்றும் – ஹமாஸ் போராளிகளுக்கு இடையில் இடம்பெறும் மோதலால் காசா பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000ஐ தாண்டியுள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
1,400 இஸ்ரேலியர்களைக் கொன்ற ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடியாக, சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு, இஸ்ரேலியப் படைகள் காசாவில் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருகின்றது.
மேலும் தெற்கு காசாவில் உள்ள இலக்கை குறிவைத்து இன்று இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் இரத்தக்களரிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கடவுளின் பெயரில் இந்த கோரிக்கையை விடுப்பதாகவும் பாப்பரசர் போப் பிரான்சிஸ் கேட்டுக்கொண்டிருந்தார்.
மேலும் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு ஐ.நா. உட்பட அரச சார்பற்ற நிறுவனங்கள் அழைப்பு விடுத்திருந்தன.
Post a Comment