லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் கடந்த 19ஆம் தேதி ரிலீசானது. ஆயுத பூஜை விடுமுறையை கணக்கில் வைத்து சோலோவாக இந்த படத்தை ரிலீஸ் செய்தனர்.
முதல் நாளில் 148 கோடி வரை வசூல் செய்த இந்த படம் இரண்டாவது நாளில் பயங்கரமாக மந்தம் தட்டியது. இதனாலேயே லியோ படத்தின் வசூலில் கொஞ்சம் தடுமாற்றமும் ஏற்பட்டு இருக்கிறது.
தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வந்த லியோ மூன்றாவது நாள் வசூலில் தலை தூக்கியது. இந்த படம் மூன்று நாளில் இந்திய அளவில் 200 கோடியை வசூல் செய்து விட்டதாக இண்டஸ்ட்ரியல் டிராக்கர் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் படத்தின் வசூல் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஆயுத பூஜை விடுமுறையை தொடர்ந்து இது அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு இருக்கிறது.
லியோ படம் என்னதான் மல்டி ஸ்டார் கதை என்றாலும் படத்தை மொத்தமாக தோளில் தாங்கியது விஜய் மட்டும் தான். விஜய் நடிப்பை பார்ப்பதற்காக மட்டும்தான் இப்போது தியேட்டர்களில் கூட்டம் குவிந்து கொண்டு இருக்கிறது. படத்தின் கதையைப் புரிந்து கொண்டு தன்னால் முடிந்தவரை அதற்கு கிரேஸ் சேர்த்திருக்கிறார் தளபதி. தமிழ்நாட்டில் மட்டும் லியோ இதுவரை 100 கோடி வசூல் செய்திருக்கிறது.
உலக அளவில் 3 நாட்களில் லியோ 35 கோடி வசூலித்திருக்கிறது. நேற்று ஒரே தினத்தில் உலகம் முழுவதும் 90 கோடி வசூல் ஆகி இருக்கிறது.
இதனால் லியோ தற்போது 400 கோடி வசூலை தாண்டி விட்டதாக சொல்லப்படுகிறது. ஆயுத பூஜை விடுமுறை நாட்களில் இந்த வசூல் 500 கோடியை நெருங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு சில தினங்களில் ஜெயிலர் வசூலை நெருங்குகிறது இந்த படம்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment