தமிழ் சினிமாவையே புரட்டி போடும் அளவிற்கு படத்தை எடுக்கக்கூடிய கெட்டிக்காரத்தனமான இயக்குனர் மணிரத்தினம். எப்படிப்பட்ட நடிகரும் இவருடைய படத்தில் நடித்தால் அவர்களுக்கு மக்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்துவிடும். அந்த அளவுக்கு கைராசியான ஒரு இயக்குனராகவும் இவரைச் சொல்லலாம்.
இவரை வைத்து சினிமாவில் முன்னேறியவர்கள் பல பேர். அதில் ஒரு நடிகர் இவருடைய இயக்கத்தின் மூலம் அறிமுகமாகி பல படங்களில் வெற்றியை கொடுத்து வந்திருக்கிறார். அதன் மூலம் இவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டவர். அப்படிப்பட்ட ஹீரோ சினிமா கேரியரை மறக்கும் படியான ஒரு கோர விபத்து இவருக்கு ஏற்பட்டது.
அதாவது காரில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு விபத்தால் இவருடைய முதுகுத்தண்டில் அடிபட்டு நடக்க கூட முடியாத நிலையில் மிகவும் அவதிப்பட்டு இருக்கிறார். அத்துடன் இவருடைய அழகான தோற்றத்தை இழந்து உடல் எடை பெருத்து காணப்பட்டிருக்கிறார்.
அதன் பின் இனிமேல் அவ்வளவுதான் சினிமாவை மறந்து விடலாம் என்று அப்படியே ஒதுங்கி விட்டார். அந்த ஹீரோ வேறு யாருமில்லை 90களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அரவிந்த்சாமி தான். இவருக்கு ஏற்பட்ட அந்த கோர விபத்தால் முடிகளை இழந்து சொட்டையாக, உடம்பில் எடை போட்டு பார்க்கவே வித்தியாசமாக மாறிவிட்டார்.
அப்படிப்பட்ட இவர் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்த நிலையில், இவரை இரண்டாவது முறையாக சினிமாவில் தூக்கி விட்டவர் இயக்குனர் மணிரத்தினம். எந்த வாய்ப்பும் இவரை தேடி வராத நிலையில் 2013 ஆம் ஆண்டு கடல் படத்தின் மூலம் இவருக்கு சாம் பெர்னாண்டோ என்ற கேரக்டரை கொடுத்து நடிக்க வைத்தார்.
அதன் பிறகு தான் தனி ஒருவன் படத்தில் சித்தார்த் அபிமன்யு கேரக்டர் இவருக்கு கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு தற்போது அனைவர் மனதிலும் நச்சென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இவருடைய சினிமா வாழ்க்கையில் மணிரத்தினம் என்பவர் எல்லாவிதத்திலும் குருவாக இருந்து அரவிந்த்சாமிக்கு விளக்கேற்றி வைத்திருக்கிறார்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment