சில இளம் வயது நடிகர்கள் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று விடாமுயற்சியுடன் போராடி வருகிறார்கள். ஆனால் அவர்களால் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்க முடியவில்லை. இப்பொழுது வரை தன்னம்பிக்கையை இழக்காமல் நிறைய படங்களில் நடித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
அப்படி இருந்தும் அவர்களால் ஒரு படத்தில் கூட ஹிட் கொடுக்க முடியாமல் கேரியரை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சில நடிகர்களை பற்றி பார்க்கலாம்
ஹரிஷ் கல்யாண்: இவர் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அரிது அரிது, சட்டப்படி குற்றம், பொறியாளன் போன்ற படங்களில் நடித்தார். ஆனாலும் சொல்லும்படியாக பரிச்சயம் ஆகாமல் இருந்தார்.
அதன் பிறகு இவருக்கு கிடைத்த வாய்ப்பு பிக் பாஸ். இதில் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அத்துடன் பிரபலமாக வந்த நிலையில் பியார் பிரேம காதல், ஓ மணப்பெண்ணே, தனுசு ராசி நேயர்களே போன்று பத்து படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஆனாலும் நிலையான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் இருக்கிறார்.
கலையரசன்: இவர் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த நந்தலாலா என்று என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் வந்தார். அதன் பிறகு அட்டகத்தி, முகமூடி, மதயானை கூட்டம், மெட்ராஸ், கபாலி, தானா சேர்ந்த கூட்டம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் ஹீரோவாகவும் அதே கண்கள் என்ற படத்தில் நடித்தார். நிறைய படங்களில் நடித்தும் சரியான வெற்றியை பார்க்க முடியாமல் இருக்கிறார்.
ஜிவி பிரகாஷ்: இவர் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகி அதன் பின் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். இவருக்கு இதில் அதிகம் ஆர்வம் வந்தால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
முக்கியமாக இவர் படங்கள் குடும்பத்துடன் பார்க்க முடியாமல் டபுள் மீனிங் படமாக தான் இருக்கும். அப்படி இவர் நடித்த த்ரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை, பேச்சிலர், போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் இவர் நடித்த எந்த படமும் செம ஹிட் என்று சொல்லும் படியாக இல்லை.
சாந்தனு: இவர் பாக்கியராஜின் மகன் என்ற புகழுடன் சினிமாவிற்குள் வந்தார். இவர் நடித்த சக்கரக்கட்டி, சித்து+2, முருங்கைக்காய் சிப்ஸ், இராவண கோட்டம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்காததால் இப்பொழுது வரை முயற்சி செய்து வருகிறார். இவர் பத்து படங்களுக்கு மேல் நடித்தும் மிகப்பெரிய வெற்றியை பார்க்கவில்லை.
அதர்வா: இவர் என்னதான் அப்பாவின் புகழால் சினிமாவிற்கு வந்திருந்தாலும் தன்னுடைய விடா முயற்சியால் சாதிக்க வேண்டும் என்று பல படங்களில் போராடி நடித்து வந்தார்.
பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்புக் குதிரை, சண்டிவீரன், ஈட்டி போன்ற பல படங்களில் நடித்தும் சரியான அங்கீகாரம் இல்லாமல் சொல்லும் படியாக பெரிய ஹிட் படங்கள் கொடுக்காமல் தவித்து வருகிறார்.
கௌதம் கார்த்திக்: இவர் தன்னுடைய அப்பாவின் மூலம் ஈசியாக சினிமாவிற்குள் நுழைந்து விட்டார் என்றே சொல்லலாம். ஏனென்றால் இவர் நடித்த முதல் படமே பெரிய ஜாம்பவான்களுடன் தான் திரைக்கு வந்தார். இவர் நடித்த வெளிவந்த முதல் படம் கடல், இப்படத்தை மணிரத்தினம் இயக்கி, ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.
அத்துடன் பாடலுக்கு வைரமுத்து என்று மிகப்பெரிய ஜாம்பவான்களை வைத்து தான் இறங்கினார். ஆனால் என்னதான் புகழால் வந்தாலும் இவருடைய விடா முயற்சி கொண்டு தற்போது வரை பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இதுவரை இன்னும் ஒரு படம் கூட ஹிட் கொடுக்கவில்லை. இவரும் நடிகர் அதர்வா போல கேரியரை தேடிக்கொண்டு தான் அலைந்து வருகிறார்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment