வித்தியாசமான கற்பனை கதைகளுக்கு இப்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. அதனால் பலரும் ஃபேண்டஸி கதைகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அப்படி ஒரு கதையுடன் வீரனாக களம் இறங்கி இருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.கே சரவணன் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. சூப்பர் ஹீரோ கதை போல் தெரிந்தாலும் ட்ரெய்லர் முழுக்க காமெடி மற்றும் ஆக்சன் பட்டையை கிளப்புகிறது.
\ஆரம்பத்திலேயே லேசர் பவர் டெக்னாலஜி மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தான் செயல்படுத்த வேண்டும் என்ற வசனத்தோடு தொடங்குகிறது.
அதைத் தொடர்ந்து அப்பாவி மக்களை ஏமாற்றி தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ளும் வில்லன் கூட்டம், அதை முறியடிக்க வரும் ஹீரோ என ட்ரெய்லர் முழுவதும் விறுவிறுப்பை கூட்டியுள்ளது. அதற்கேற்றார் போல் பின்னணி இசையும், விஷுவல் காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளது.
மேலும் வில்லனாக வரும் வினய் வழக்கம் போல இதிலும் கொடூரமானவராக வருகிறார்.
அவருடைய திட்டத்திற்கு எதிராக செயல்படும் ஆதி வீரனாக மாறுவதும், அதற்கு துணையாக இருக்கும் கருப்பு குதிரை என திரில்லர் காட்சிகளும் ஆர்வத்தை கூட்டி உள்ளது.
அந்த வகையில் இந்த சூப்பர் ஹீரோ வரும் ஜூன் 2 ஆம் தேதி ரசிகர்களை காண வருகிறார். தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் ஆதி இப்படத்தில் தன் முழு திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார் என்பது இதில் நன்றாக தெரிகிறது.
அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் இந்த வீரன் ட்ரெய்லர் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment