அண்மையில் புங்குடுதீவு ஈஸ்ரன் கழக மைதானத்தில் அக்கழகத்தினரின் முழுமையான ஒத்துழைப்போடு 15 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி படங்கள் இனைப்பு

 



புங்குடுதீவு சென்சேவியர் விளையாட்டுக்கழகமும் சனசமூக நிலையமும் இணைந்து 


அண்மையில் புங்குடுதீவு ஈஸ்ரன் கழக மைதானத்தில் அக்கழகத்தினரின் முழுமையான ஒத்துழைப்போடு 15 ஓவர்கள் கொண்ட  கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்றினை நடாத்தியிருந்தனர் .  புங்குடுதீவை சேர்ந்த  நசரெத் , ஈஸ்ரன் , அம்பாள் ,  நண்பர்கள் , வொரியர்ஸ் , சென்சேவியர் ஆகிய கழகங்கள் பங்குபற்றிய இத்தொடரின் இறுதியாட்டத்தில்  புங்குடுதீவு பாரதி விளையாட்டுக்கழகத்தினை எதிர்கொண்ட புங்குடுதீவு வொரியர்ஸ் கழகத்தினர்  இலகுவாக வெற்றி இலக்கினை அடைந்து  வெற்றிக்கிண்ணத்தினையும் பணப்பரிசிலையும் தட்டிச்சென்றனர் . முதலாமிடத்துக்கான வெற்றிக்கிண்ணத்தினையும் பணப்பரிசிலையும்  அமரர்களான கருணாகரன் சாரதாம்பாள் தம்பதிகளின் நினைவாக  அவர்களது குடும்பத்தினரால் வெற்றிக்கிண்ணமும் பணப்பரிசிலும் வழங்கப்பட்டிருந்தன .  இரண்டாவது இடத்தினை பெற்றுக்கொண்ட  பாரதி கழகத்தினருக்கான வெற்றிக்கிண்ணத்தையும் பணப்பரிசிலையும்  அமரர் ஜெகதீஷ்வரன் காந்தி ஆசிரியர் நினைவாக  புங்குடுதீவு ஈஸ்ரன் விளையாட்டு கழகத்தினர் வழங்கியிருந்தனர் .




 சென்சேவியர் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டித்தொடரில்  முதலாமிடத்தை பாரதி விளையாட்டுக் கழகம் பெற்றுக்கொண்டது . முதலாமிடத்துக்கான வெற்றிக்கிண்ணத்தையும் , பணப்பரிசிலையும்  அமரர் சிவலோகநாதன் கிருபாகரன் ( புங்குடுதீவு தனியார் பேருந்து சங்க தலைவர் கரன் ) அவர்களின் நினைவாக  அவரது சகோதரர் சி. திவாகரன் வழங்கியிருந்தார் . 




கரப்பந்தாட்டத்தில் இரண்டாவது இடத்தினை அம்பாள் விளையாட்டு கழகத்தினர் பெற்றுக்கொண்டனர் . இக்கழகத்திற்கான வெற்றிக்கிண்ணத்தையும் பணப்பரிசிலையும்  புங்குடுதீவு நலன்புரி சங்க செயலாளர் பிள்ளைநாயகம் சதீஷ் தனது சகோதரி அமரர்  பிள்ளைநாயகம் ரேணுகா நினைவாக வழங்கியிருந்தார் . 


மேலும் இச்சுற்றுப்போட்டிகளில் நல் ஒழுக்கத்தினை வெளிப்படுத்திய விளையாட்டு வீரர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களை  திரு .கிறிஸ்ரிராஜ் ஜீவா , திரு . உதயசூரியன் கஜேந்திரன் ஆகியோர் வழங்கியிருந்தனர் .


புங்குடுதீவு சென்சேவியர் சனசமூக நிலையத்தின் முக்கியஸ்தர்  திரு. விவேக் ராகுலனின் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில்  விருந்தினர்களாக  தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி செயலாளரும்  வேலணை பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன் நாவலன் , TK transport உரிமையாளர்  திலீப் , புங்குடுதீவு -  பிரான்ஸ் சவேரியார் ஒன்றிய தலைவர் செபமாலை மதன் ,  புங்குடுதீவு அனைத்து விளையாட்டு கழகங்களின் ஒன்றிய உறுப்பினர்களான  நா. அழகேசன் , ஜெயபால் காளிதாஸ் , கருணாகரன் குணாளன் , சி. திவாகரன் , த.சஞ்சீவ் மற்றும் சமூகசேவகர்களான சு. கமனிற்றா , தர்மபிரகாசம் சசி , கிறிஸ்ரிராஜ் ஜீவா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர் .




உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube



Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial