ஆசிரிய நியமனத்தை இளம் பட்டதாரிகளுக்கு வழங்குமாறு கோரிக்கை!

 



ஆசிரிய நியமனத்தினை வேலையற்ற பட்டதாரிகளான இளம் பட்டதாரிகளுக்கு வழங்க வேண்டும் என வேலையற்ற பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்கள், ‘வேலையில்லாப் பட்டதாரிகள் அமைப்பின் ஊடாக அறியத் தருவது யாதெனில்,  தற்போது நாட்டில்  ஏற்பட்டுள்ள நெருக்கடியின் விளைவாக, நாட்டை அபிவிருத்தி அடையச்செய்யும் பட்டதாரிகளுக்கு சவால் உருவாகியுள்ளது.

அரசாங்கம் பட்டதாரிகளுக்கு நியமனங்களை இரத்து செய்துள்ளது, தனியார் நிறுவனங்கள் பட்டதாரிகளை நிராகரித்து வருகின்றன.

சுயதொழிலை உருவாக்குவதற்கான முதலீடுகள் இன்றி வங்கிகளில் வட்டிக்குப் பணம் பெற்று சுயதொழிலை உருவாக்கவும் முடியவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் எமது சமுதாயத்தின் வரிப்பணத்தில் கல்விகற்ற நாம் சமுதாய நலனுக்காக செயற்படாமல் இருப்பது எமக்கு  குற்ற உணர்வினைத் தருவதோடு,  பெற்றவர்களுக்கும், சகோதரர்களுக்கும் உரிய கடமைகளை நிறைவேற்ற முடியாமலும் எமது எதிர்காலத்துக்கான சேமிப்பையோ  வாழ்க்கையைத் தொடங்குவதற்கான திட்டமிடலையோ உருவாக்கமுடியாத சூழலிலும்  தள்ளப்பட்டுள்ளோம்.

ஆகவே, எமக்கான எதிர்காலம் மீட்ச்சி பெறாதா? எனும் கவலையோடு, அரசாங்கம் எதிர்க்கொண்டுள்ள பிரச்சனைககளை அறிந்தும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் சூழ்நிலைக்கு வந்துள்ளோம்.

நாம் அரசாங்கத்தால் கொடுக்கப்படவிருக்கும் ஆசிரிய நியமனத்துக்கு பட்டதாரிகள் தேர்வு இடம்பெற இருப்பதனை நன்கு அறிவோம். ஆகவே, இளம் பட்டதாரிகளாகிய எங்களின் மீது அக்கறை செலுத்தும் கடமையும் பொறுப்பும் உங்களுக்கு இருக்குமென்பதையும் நாம் உணர்கின்றோம்.

எமது எதிர்காலத்தின் மேல் கரிசனை கொண்டு எமது கோரிக்கைகளை பரிசீலித்து ஒரு திடமான தீர்வை பெற்றுத்தருவீர்கள் என நம்புகின்றோம்.“ என தெரிவித்தனர்.

www.Akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial