நேற்று (17.02.2023 ) காலை 10 மணியளவில் பிரித்தானிய இல்லத்துக்கு முன்பாக ஆரம்பித்து ,பிரதமர் அலுவலகத்திலும் வெளிவிவகார அமைச்சகத்திலும் மனுவைக் கையளித்த பின்னர் ஐ . நா நோக்கி ஈருருளிப்பயணம் படங்கள் இனைப்பு



ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 52 வது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும்  நேற்று (17.02.2023 )  காலை 10 மணியளவில் பிரித்தானிய இல்லத்துக்கு முன்பாக ஆரம்பித்து ,பிரதமர் அலுவலகத்திலும் வெளிவிவகார அமைச்சகத்திலும் மனுவைக் கையளித்த பின்னர்  ஐ . நா நோக்கி ஈருருளிப்பயணம் ஆரம்பிக்கப்பட்டதோடு,சம நேரத்தில்  தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி   நெதர்லாந்திலிருந்தும்   மனித நேய ஈருருளிப்பயணம்   ஆரம்பமாகியிருந்தது.





இந்த   மனித நேய ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் டென் ஹாக்  நகரில் அமைந்துள்ள  அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்  ( International Criminal Court)    முன்பாக  கனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்று, பெல்சியம் நோக்கி  பயணித்து,புரூசல் மாநகரத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றின்முன் கவனயீர்ப்புப் போராட்டத்துடன் ஈருருளிப்பயணம் தொடர்ந்து பயணித்து.பெல்சியம் நாட்டினை ஊடறுத்து ,பெல்ஜியத்தில் உள்ள மற்றுமொரு நகரமாகிய அர்லோன்(Belgiem Arlon) நகரத்தை அடைந்து அங்கு மாநகரசபை முதல்வரைச் சந்தித்து தமிழின அழிப்புச் சம்பந்தமான மனு கையளிக்கப்பட்டது.பின் லுக்ஸ்சம்பூர்க்(Luxemburg) எல்லையை வந்தடைந்த ஈருருளிப்பணப் போராட்டம் யேர்மனி நோக்கி பயணித்து மாலை டில்லிங்கன் என்ற இடத்தில் நிறைவு பெற்றது.தொடர்ந்து இன்று(23.02.2023)இன்று அகவணக்கத்துடன் ஆரம்பித்த ஈருருளிப்பயணம் சால்புறூக்கன் நகரத்தை அடைந்து, அரசியல் சந்திப்பினைத்தொடர்ந்து மனுக்கையளிக்கப்பட்டு, தொடர்ந்தும் ஜேர்மனூடாக பிரான்ஸ் சென்று ஐரோப்பிய பாராளுமன்றம் ஊடாக சுவிஸ் நாட்டிற்குள் சென்று .06.03.2023 அன்று ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையை சென்றடையவுள்ளது.




ஈருருளிப்பயணத்தினை மேற்கொள்ளும் அறவழிப்போராட்டக்கார்ர்களை ஒவ்வொரு நாட்டு மக்களும் வரவேற்று, உணர்வெழுச்சியுடன் தங்களது ஆதரவினை வழங்குவதோடு, இப்போராட்டங்களில் இணைந்து கொள்ளுவதும் காலத்தின் கடமையென்பதை உணர்ந்து பயணியுங்கள் 


“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” 


உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial