அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தியது. ரூ. 150 கோடிபட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.
வினோத் இயக்கத்தில் வெளியான வலிமை படம் அஜித்தின் பைக் ரேஸிங்கை ரசிக்கும் ரசிகர்களுக்குவிருந்தாக அமைந்தது. தற்போது வினோத்-போனி கபூர்-அஜித் கூட்டணி துணிவு திரைப்படம் தயாராகியுள்ளது, படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி யூடியூபில் பல சாதனைகளை செய்தது
தற்போது படம் வரும் பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளன
துணிவு வசூல்
படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னரே வெளிநாடுகளில் நல்ல ப்ரீ புக்கிங் நடந்தது. தற்போது தமிழகத்திலும் 500 மேற்பட்ட திரையரங்குகளை படம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த விவரம், புக்கிங் போன்ற விவரங்களை வைத்து கணித்து பார்க்கும் போது படம் முதல் நாள் முடிவில் ரூ. 30 கோடி வரை வசூலிக்கும் என கூறுகின்றனர்.
Post a Comment