பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த ஜனனி தற்போது பாவாடை தாவணியுடன் பொங்கல் கொண்டாடி இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்தவர்களை கலந்து கொள்ள வைக்கும் திட்டத்தை சீசன் மூன்றில் இருந்து அமல்படுத்தி வருகிறது விஜய் டிவி.
சீசன் மூன்றில் லாஸ்லியா, தர்ஷன் என இருவர் கலந்து கொண்டனர். சீசன் ஐந்தில் மதுமிதா என்பவர் கலந்து கொண்டார். எனவே சீசன் ஆறிலும் இலங்கையை சேர்ந்த ஒருவரை உள்ளே அனுப்புவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் செய்தி வாசிப்பாளரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமாக இருந்த ஜனனியை உள்ளே அனுப்பி இருந்தது பிக்பாஸ். ஆரம்பம் முதலே ஜனனிக்கு மக்கள் ஆதரவு இருந்து வந்தது.
தைரியமாக தன்னுடைய கருத்தை அனைத்து இடத்திலும் கூறி வந்தார் ஜனனி. சுமார் 70 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த ஜனனி இரண்டு வாரங்களுக்கு முன்பு யாரும் எதிர்பாராத விதமாக வெளியேற்றப்பட்டார். ஜனனியின் வெளியேற்றம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
ரசிகர்களுக்கு தெரியாத ஒரு புது முகமாக இருந்த ஜனனி இலங்கையில் இருந்து ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தார். இவருடைய அழகான கொஞ்சும் தமிழுக்காகவே பல ரசிகர்கள் பெருகினர்.
தொடக்கம் முதலே விளையாட்டில் குறைந்த ஈடுபாடு காட்டி வந்தார் ஜனனி. பின்னர் அமுதவாணனுடன் இணைந்து விளையாட்டில் சுத்தமாக ஆர்வம் இல்லாமல் இருந்து வந்தார். அதனால் இவரை பாதியிலேயே வெளியேற்றது பிக்பாஸ் குழு. ஜனனியின் வெளியேற்றம் ஏற்புடையதாக இல்லை என்று இலங்கை ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.
மேலும் இனிமேல் ஜனனி இல்லாத பிக்பாஸை நாங்கள் பார்க்க மாட்டோம் என்றும் இணையதளத்தில் கருத்து தெரிவித்து வந்தனர். பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் அவர் பேட்டிகள் கொடுத்து வருகிறார். மேலும் போட்டோ ஷூட்டுகள் நடத்தி அதை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் ஜனனி தற்போது அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இன்று பாவாடை தாவணியுடன் பொங்கல் கொண்டாடி இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈
https://play.google.com/store/apps/details?id=akswisstamilfm.aplirab 👈👈
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment