ஜனனிக்கு அடித்த மிக பெரிய ஜாக்பாட்.! தளபதி 67ல் இணையும் ஜனனி? வெளியான புது தகவல்.!

 


ஜனனிக்கு அடித்த மிக பெரிய ஜாக்பாட்.! தளபதி 67ல் இணையும் ஜனனி? வெளியான புது தகவல்.!


பிக்பாஸில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் தாங்கள் வெள்ளித்திரையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் பிக்பாஸில் கலந்து கொள்கிறார்கள். அது போல் தற்போது இலங்கையில் இருந்து பிக்பாஸ் சீசன் சிக்ஸில் கலந்து கொண்டுள்ள ஜனனிக்கு தளபதி விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக இணையத்தில் செய்தி வேகமாக பரவி வருகிறது. பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள பிரபலங்களுக்கு தொடர்ந்து சினிமா திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்து வருகிறது. ஏற்கனவே பல பிக்பாஸ் பிரபலங்கள் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக லாஸ்லியா, தர்ஷன், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா, முகேன், கவின், சாண்டி என பலருக்கும் பிக்பாஸ் வெள்ளித்திரைக்கு செல்லும் ஒரு திறவுகோலாக அமைந்திருந்தது. பிக் பாஸ் சீசன் 6 இல் கலந்து கொண்டுள்ள ஜனனிக்கும் தற்போது அது போல் ஒரு ஜாக் பாட் அடித்திருக்கிறது என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சமேக வலைத்தளங்களில் ஜனனியை டேக் செய்து அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



வெள்ளித்திரையில் வாய்ப்புகள் தேடியும் அல்லது இழந்த வாய்ப்புகளை மீண்டும் மீட்டு எடுப்பதற்குமான ஒரு இடமாக பிக்பாஸ் அமைந்திருக்கிறது. அந்த வகையில் பிக்பாஸில் கலந்து கொண்டுள்ளது பலருக்கும் வாழ்க்கை திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. ஜி.பி முத்து, மைனா, மகேஸ்வரி போன்றவர்கள் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகின்றனர். இதில் லோகேஷ் கனகராஜின் கடைசி படமான விக்ரம் படத்தில் மைனா, மகேஸ்வரி, ஷிவானி போன்றவர்களுக்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்திருந்தார். அதேபோல அஜித்தின் துணிவு படத்தில் பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டிருந்த பாவனி, அமீர், சிபி ஆகியவர்கள் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றிருந்தார்கள். தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்து வருகின்றனர் தமிழ் இயக்குனர்கள். குறிப்பாக லோகேஷ் கனகராஜ் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வாய்ப்பை கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அடுத்ததாக விஜயை வைத்து தளபதி 67 என்கிற படத்தை இயக்கப் போகிறார் லோகேஷ் கனகராஜ்.




படத்தில் தற்போது சீசன் 6ல் கலந்து கொண்டிருந்த ஜனனியை நடிக்க வைக்க இருப்பதாக ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. இந்த செய்தி ஒரு தனியார் செய்தி தாளில் வந்ததை அடுத்து ஜனனியை டேக் செய்து சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் இந்த தகவலை பரப்பி வருகின்றனர். ஒரு சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் முக்கியத்துவம் நிறைந்த கதாபாத்திரத்தை லோகேஷ் கனகராஜ் ஜனனிக்கு கொடுக்க இருப்பதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவருடன் சேர்த்து ராஷ்மிகா மந்தனாவின் முன்னாள் காதலரான கன்னட நடிகர் ரக்ஷித் ரெட்டியும் தளபதி 67 படத்தில் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், மிஷ்கின், கௌதம் மேனன் ரக்‌ஷித் ரெட்டி, ஜனனி என அடுத்தடுத்த பிரபலங்கள் படத்தில் இணைந்து வருவது தளபதி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க

உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி   www.Akswisstamilfm.com 

 https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈

 https://play.google.com/store/apps/details?id=akswisstamilfm.aplirab   👈👈

 Akswisstamilfm - YouTube

#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial